பள்ளி கட்டிட மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது
திருவாடானை அருகே பள்ளி கட்டிட மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் மாணவர்கள் தப்பினர்.
தொண்டி,
திருவாடானை அருகே பள்ளி கட்டிட மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் மாணவர்கள் தப்பினர்.
மேற்கூரை பூச்சு பெயர்ந்தது
திருவாடானை தாலுகா ஓரியூர் புதுவயல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று வழக்கம் போல் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தனர். அப்போது திடீரென சத்தம் கேட்டு உள்ளது. ஆசிரியர்கள் சத்தம் வந்த இடத்தை நோக்கி சென்று பார்த்த போது பள்ளி கட்டிட வராண்டாவின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. நல்லவேளை அந்த வழியாக யாரும் செல்லவில்லை. உடனே ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். தகவலறிந்த திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள், ஊராட்சி தலைவர் நிரோஷாகோகுல், முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கன்வாடி மையம் செயல்பட நடவடிக்ைக
அப்போது கிராம மக்கள் பழுதான கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். இதையடுத்து பள்ளி கட்டிடம் பூட்டப்பட்டு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார்.
Related Tags :
Next Story