புதுக்கோட்டை சங்கிலி பறிப்பு திருடர்கள் 2 பேர் கைது


புதுக்கோட்டை சங்கிலி பறிப்பு திருடர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 March 2022 12:55 AM IST (Updated: 12 March 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை சங்கிலி பறிப்பு திருடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

புதுக்கோட்டை 
புதுக்கோட்டையில், பொதுமக்களிடம் இருந்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டதன்பேரில், கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செபஸ்டியான் மற்றும் போலீசார் நேற்று பொற்பனைக்கோட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த 2 பேரை மடக்கி விசாரணை நடத்தினர்.  அப்போது அவர்களில் ஒருவர் திருநாளூரை சேர்ந்த முருகானந்தம் (வயது 21), மற்றொருவர் மறமடக்கியை சேர்ந்த சந்ரு(22) என தெரியவந்தது.
கைது
 மேலும், அவர்கள் 2 பேரும் சங்கிலி பறிப்பு திருடர்கள் என்பதும், கணேஷ்நகர் பகுதியில் ஏற்கனவே ஒரு பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டது ஆகும். இதையடுத்து முருகானந்தம், சந்ரு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story