மினி மாரத்தான் போட்டி
சிவகாசியில் அமைதிக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியில் 59-வது விளையாட்டு விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அமைதிக்கான ஓட்டம் என்ற தலைப்பில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு 12.5 கிலோமீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் இலக்காக வைக்கப்பட்டது. போட்டியினை கல்லூரியின் முதல்வர் அசோக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 1,956 மாணவர்களும், 1,400 மாணவி களும் கலந்து கொண்டனர். முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜான்சன், உதவி இயக்குனர் கவிதா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story