கேட்பாரற்று கிடந்த 6 இருசக்கர வாகனங்கள் மீட்பு
பரமக்குடி பகுதியில் கேட்பாரற்று கிடந்த 6 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு உள்ளன.
பரமக்குடி,
பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பாம்பூர், பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துமாணிக்கம், தேவேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் 6 இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று ஒவ்வொரு இடங்களிலும் நின்றிருந்தது. உடனே போலீசார் அதை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. ஆகவே வாகனங்களின் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தகுந்த ஆதாரங்களுடன் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்து மீட்டுச் செல்லுமாறு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாணிக்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story