அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 12 March 2022 1:31 AM IST (Updated: 12 March 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

மாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தாயில்பட்டி,
மாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
ஏழாயிரம்பண்ணை 
ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள கங்கரகோட்டை ஊராட்சியை சேர்ந்த கீழசெல்லையாபுரம் கிராமத்தில் சுந்தாளம்மன் கோவிலில் மாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு  சிறப்பு பூஜை நடைபெற்றது.  ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில், சத்திரப்பட்டி மாரியம்மன் கோவில், செவல்பட்டி காளியம்மன் கோவில், வெம்பக் கோட்டையில் அங்காள பரமேஸ்வரி கோவில், மடத்துப்பட்டி மாரியம்மன் கோவில், துரைசாமிபுரம் ராஜகாளி அம்மன் கோவில், ராமலிங்கபுரத்தில் சவுடாம்பிகை அம்மன் கோவில், மற்றும் தாயில்பட்டி தெற்கு தெருவில் உள்ள கழுவுடை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
வத்திராயிருப்பு  
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில், தாணிப்பாறை விலக்கில் அமைந்துள்ள அம்மாசரம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
சிவகாசி 
 சிவகாசி பேச்சியம்மன் கோவில், பாப்பாத்தியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story