வாக்காளர் விழிப்புணர்வு பேரணி


வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 12 March 2022 1:34 AM IST (Updated: 12 March 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை சப்-கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆண்டாள் கோவில் அருகே தொடங்கிய இந்த பேரணியை சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் தாசில்தார் ராம சுப்பிரமணியன், துணை தாசில்தார் சசிகலா, வருவாய் ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணி நான்கு ரத வீதி வழியாக வந்து நகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.  பேரணியின்போது சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்களை வினியோகம் செய்தார். வருகிற 15-ந் தேதி வரை இணையதளத்தில் வாக்கின் வலிமை என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும், வினாடி-வினா போட்டிகளும் நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என பேரணியின் போது தெரிவிக்கப்பட்டது.

Next Story