தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சீரமைக்க வேண்டும்
குளச்சல் பகுதியில் பாம்பூரி வாய்க்கால் கடலில் சென்று கலக்கிறது. கடந்த நவம்பர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த வாய்க்காலில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஏராளமான விவசாய நிலங்களும், பயிர்களும் சேதமடைந்தன. பல மாதங்கள் கடந்தும் உடைப்பு ஏற்பட்ட பகுதிகள் சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.பிரபாகரன், குளச்சல்.
பஸ் வசதி தேவை
வடக்கு தாமரைகுளத்தில் இருந்து காலை வேளையில் நாகர்கோவில் வழி தடத்தில் பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தினமும் ஈத்தங்காடு வந்து நடந்து செல்வதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன் கருதி அவர்கள் பயன்பெரும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலை வேளையில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சித்தார்த்தன், வடக்கு தாமரைகுளம்.
இடையூறான மின்கம்பம்
கீழ ஆசாரிபள்ளத்தில் 13-வது அன்பியம் பகுதியில் உள்ள தெருவின் நடுவே 2 மின்கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்டணி சதீஷ், கீழஆசாரிபள்ளம்.
சுகாதார சீர்கேடு
திங்கள்நகர் பகுதியில் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே சாலையோரம் அமைந்துள்ள கழிவுநீர் ஓடை முறையாக பராமரிக்கப்படாததால் தண்ணீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அங்கு துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, கழிவுநீர் ஓடையை தூர்வாரி தண்ணீர் வடிந்தோட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-ஆர்.பி.தெய்வநாயகம், திங்கள்நகர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
குளப்புறம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தலச்சன்விளையில் இருந்து சுந்தரவனம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன் ஜெயராஜ், சூழக்கல்விளை.
தெரு விளக்கு மாற்றப்பட்டது
புத்தளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரியபெருமாள்விளை பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. செய்தி வெளியிட்ட அன்றே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கு பொருத்தி எரிய வைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story