குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்


குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 12 March 2022 1:56 AM IST (Updated: 12 March 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுலவகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. தொடர்ந்து 17-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் 21-ந் தேதி நடைபெறவுள்ளது.
 இம்முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட 4 லட்சத்து 8 ஆயிரத்து 358 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுள்ள 1 லட்சத்து 23 ஆயிரத்து 88 பெண்களுக்கும் மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகமான புழுத்தொற்று இருப்பின் வயிற்றுவலி, பசியின்மை, உடல் சோர்வு, ரத்தசோகை போன்ற அறிகுறிகள் தோன்றும். அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் மாத்திரைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.கருப்பசாமி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராமு, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஸ்ரீராம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story