500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 12 March 2022 2:01 AM IST (Updated: 12 March 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, முதியவரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்:
தஞ்சையில் மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, முதியவரை கைது செய்தனர்.
சோதனை
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. ரேஷன் பொருட்கள் மற்றும் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தஞ்சை கீழவாசல் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் கீழவாசல் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது அந்த பகுதியில் உள்ள மாவு மில்லில் 10 மூட்டைகளில் தலா 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் 500 கிலோ அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக தஞ்சை பாரதிநகரை சேர்ந்த கவுரிசங்கர் (வயது69) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுகள் மூலம் பொதுமக்கள் வாங்கும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வந்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

Next Story