தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை


தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 12 March 2022 2:05 AM IST (Updated: 12 March 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:
தஞ்சையில், வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சை மானம்புச்சாவடி ஆடக்காரத்தெருவை சேர்ந்தவர் தர்மராஜா. இவருடைய மகள் கலைவாணி(வயது 20). இவர், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கலைவாணி வேலைக்கு சென்றார். அப்போது அங்கு அவருக்கு தோழிகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவேதனை அடைந்த அவர் பாதியிலேயே வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இந்த நிலையில் வெளியில் சென்றிருந்த கலைவாணியின் தந்தை  வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் தனது மகள் தூக்கில் தொங்குவதைகண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 உறவினர்கள் சாலை மறியல்
இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலைவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலைவாணியின் தந்தை தர்மராஜா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும், கலைவாணி சாவுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியும்  தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அருகில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைக்கப்பட்ட கலைவாணியின் உடலுடன் மறியலில் ஈடுபட போவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story