கத்திமுனையில் வாலிபரிடம் நகை பறிப்பு


கத்திமுனையில் வாலிபரிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 12 March 2022 2:12 AM IST (Updated: 12 March 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

கொண்டலாம்பட்டி அருகே கத்திமுனையில் வாலிபரிடம் காரில் வந்த திருநங்கைகள் உள்பட 5 பேர் நகையை பறித்து சென்றுள்ளனர்.

கொண்டலாம்பட்டி:-
சங்ககிரி அருகே உள்ள பச்சன்காட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் சுப்ரீம் (வயது 23). இவர் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சேலம் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டாலம்பட்டி அருகே ராக்கிபட்டி பிரிவு ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளை ஒரு கார் வழிமறித்து நின்றது. காரில் இருந்து இறங்கி வந்தவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சுப்ரீம் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்து சென்று விட்டனர். காரில் 3 திருநங்கைகள் உள்பட 5 பேர் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கத்திமுனையில் வாலிபரிடம் நகையை பறித்து சென்ற நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் கார் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த கார் புதுச்சேரியை சேர்ந்த முத்துவிஜயன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், காரை கார்த்திக் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. மேலும் காரில் திருநங்கைகள் 3 பேர் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் 5 பேரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story