ஓய்வு பெற்ற பெண் சத்துணவு ஊழியரை கொன்றது ஏன்?
தலைவாசல் அருகே ஓய்வு பெற்ற பெண் சத்துணவு ஊழியரை கொன்றது ஏன்? என்று போலீசில் சரண் அடைந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தலைவாசல்:-
தலைவாசல் அருகே ஓய்வு பெற்ற பெண் சத்துணவு ஊழியரை கொன்றது ஏன்? என்று போலீசில் சரண் அடைந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை
தலைவாசல் அருகே தென்குமரை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 57). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இரவு வெங்கடாசலம் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் ராமசாமி வீட்டுக்கு சென்றது. அப்போது அங்கு அவருடைய அக்காள் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியரான பூவாயி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
இதனால் அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வெங்கடாசலம் உள்பட 10 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசில் சரண்
இந்த வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலையில் முக்கிய புள்ளியாக இருந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் வெங்கடாசலம் தலைவாசல் போலீசில் சரண் அடைந்தார். தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர். வெங்கடாசலம் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனக்கும், தென்குமரை கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமிக்கும் நிலம் விற்பனை செய்வது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. அதாவது அவருடைய நிலத்தை வாங்குவதற்காக முன்பணம் கொடுத்து இருந்தும் அவர் நிலத்தை விற்பனை செய்யாமலும், பதிவு செய்ய வராமலும் இருந்தார். மேலும் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க வந்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
பயிரை அழித்ேதாம்
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி எனது தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் அவருடைய விவசாய நிலத்தில் இருந்த மக்காச்சோள பயிரை அழித்தோம். மேலும் அன்றிரவு ராமசாமியை தாக்க அவருடைய வீட்டுக்கு சென்றோம். ஆனால் வீட்டில் அவர் இல்லை. அவருடைய அக்காள் பூவாயி மட்டும் வீட்டில் இருந்தார். இதனால் அவரை பலமாக தாக்கினோம்.
இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே நாங்கள் அங்கிருந்து தப்பி விட்டோம். மறுநாள் அவர் இறந்த தகவலை தெரிந்து கொண்டேன். மேலும் கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்தேன். தற்போது போலீசார் தீவிரமாக தேடி வந்ததால் சரணடைந்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story