கலபுரகி, பல்லாரி, விஜயாப்புரா நகரங்களில் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்படும்-மந்திரி பைரதி பசவராஜ்
கலபுரகி, பல்லாரி, விஜயாப்புரா நகரங்களில் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்படும் என்று சட்டசபையில் மந்திரி பைரதி பசவராஜ் கூறியுள்ளார்
பெங்களூரு: கலபுரகி, பல்லாரி, விஜயாப்புரா நகரங்களில் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்படும் என்று சட்டசபையில் மந்திரி பைரதி பசவராஜ் கூறியுள்ளார்.
தெருவிளக்கு பராமரிப்பு
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 6-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. இதில் காங்கிரஸ் உறுப்பினர் கனிஜ் பாத்திமா கேட்ட கேள்விக்கு நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ் பதிலளிக்கையில் கூறியதாவது:-
கலபுரகியில் தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. இதை 6 தொகுப்புகளுக்கு பிரித்து டெண்டர் விடப்பட்டது. ஆனால் இந்த டெண்டரில் பங்கேற்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. அதனால் தெருவிளக்கு பராமரிப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
மின் பயன்பாடு
நகரின் முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்படும். கலபுரகி, பல்லாரி, விஜயாப்புரா ஆகிய மாநகரங்களில் விரைவில் எல்.இ.டி. மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இதன் மூலம் மின் பயன்பாடு குறையும். அத்துடன் மின் கட்டணமும் குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு பைரதி பசவராஜ் கூறினார்.
Related Tags :
Next Story