குழந்தையை கடித்து சித்ரவதை செய்து கர்ப்பிணியை எரித்து கொல்ல முயற்சி; 2-வது கணவர் கைது


குழந்தையை கடித்து சித்ரவதை செய்து கர்ப்பிணியை எரித்து கொல்ல முயற்சி; 2-வது கணவர் கைது
x

பெங்களூருவில் குழந்தையை கடித்து சிதரவதை செய்ததுடன் கர்ப்பிணியை எரித்து கொல்ல முயன்ற 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்

பெங்களூரு:
பெங்களூருவில் குழந்தையை கடித்து சிதரவதை செய்ததுடன் கர்ப்பிணியை எரித்து கொல்ல முயன்ற 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர். 

3 மாத கர்ப்பிணி

பெங்களூரு பையப்பனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பழைய பையப்பனஹள்ளி பகுதியில் வசிப்பவர் பாபு. இவருடைய மனைவி மீனா(வயது 24). மீனாவின் கணவர் இறந்து விட்டார். முதல் கணவர் மூலம் மீனாவுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதில், 2 குழந்தைகள் பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையில், பாபுவை மீனா 2-வதாக திருமணம் செய்து கொண்டு பழைய பையப்பனஹள்ளியில் வசித்து வந்தார்.

மீனா வீட்டு வேலை செய்து வருகிறார். பாபு கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். தற்போது மீனா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். பாபுவுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. தினமும் அவர் மது அருந்திவிட்டு குடிபோதையில் மீனாவுடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுஅருந்த பணம் கேட்டும் மீனாவை பாபு அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது பெண் குழந்தையையும் கடித்து சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது.

உயிருடன் எரித்து கொல்ல...

இந்த நிலையில், நேற்று முன்தினமும் மீனாவிடம் பணம் கேட்டு பாபு சண்டை போட்டுள்ளார். அப்போது பணம் தர மறுத்து வீட்டில் இருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி தற்கொலை செய்ய போவதாக மீனா தனது கணவர் பாபுவை மிரட்டியதாக தெரிகிறது. அந்த சந்தா்ப்பத்தில் மீனாவிடம் இருந்த டீசலை பிடுங்கி, அவர் மீது ஊற்றியதுடன் பாபு தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் உடலில் தீப்பிடித்து அங்கும், இங்கும் ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீனா உடலில் பிடித்த தீயை அணைத்தனர்.

பின்னர் மீனாவை மீட்டு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் விசாரணையில், மதுஅருந்த பணம் கேட்டு சண்டை போட்ட பாபு, தனது மனைவி மீனாவை உயிருடன் எரித்து கொல்ல முயன்றது தெரியவந்தது. மேலும் மீனாவின் குழந்தையை கடித்து பாபு சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பையப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story