சிவமொக்காவில், கொத்தடிமைகளாக வேலை பார்த்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 19 பேர் மீட்பு
சிவமொக்காவில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 19 பேரை அதிகாரிகள் மீட்டனர்
சிவமொக்கா: சிவமொக்காவில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 19 பேரை அதிகாரிகள் மீட்டனர்.
கொத்தடிமைகள்
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஆவினஹள்ளி கிராமம் அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமான பணிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் அதே பகுதியில் தங்கி ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அந்த தொழிலாளர்களில் பலர் கொத்தடிமைகளாக இருந்து பணியாற்றி வருவதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான புகார்கள் சாகர் வட்டார துணை அதிகாரி நாகராஜ், தாசில்தார் மல்லேஷ் ஆகியோருக்கு சென்றன.
19 பேர் மீட்பு
அதன்பேரில் அதிகாரிகள் நேற்று கட்டுமான பணி நடைபெற்று வரும் தனியார் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 19 பேர் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 19 பேரையும் அதிகாரிகள் மீட்டனர். அவர்களில் 5 குழந்தைகள் மற்றும் 6 பெண்களும் அடங்குவர்.
பின்னர் அவர்களுக்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் இதர படிகளை வாங்கிக் கொடுத்தனர். மேலும் அவர்களை சிவமொக்காவில் இருந்து சத்தீஸ்கருக்கு அனுப்பி வைத்தனர்.
4 பேர் மீது வழக்கு
இதுதொடர்பாக ஒப்பந்ததாரரான பெங்களூருவை சேர்ந்த ராமகிருஷ்ணா, தனியார் நிறுவன வேலைவாய்ப்பு அதிகாரி யோகிபாபு, ராமகிருஷ்ணன் மற்றும் திருப்பதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story