சக மாணவர்கள் ‘வீடியோ கால்’ செய்து தொல்லை; தங்கும் விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


சக மாணவர்கள் ‘வீடியோ கால்’ செய்து தொல்லை; தங்கும் விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 March 2022 2:53 AM IST (Updated: 12 March 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

சக மாணவர்கள் ‘வீடியோ கால்’ ெசய்து தொல்லை கொடுத்ததால் தங்கும் விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்

உப்பள்ளி:
சக மாணவர்கள் ‘வீடியோ கால்’ ெசய்து தொல்லை கொடுத்ததால் தங்கும் விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை

தார்வார் டவுன் சப்தாபுரா படாவனே பகுதியில் தனியார் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கே.ஏ.எஸ். தேர்வு உள்பட பல்வேறு அரசு தேர்வுகள் எழுத ஏராளமானோர் படித்து வருகின்றனர். இங்கு தார்வாரை சேர்ந்த கீதா (வயது 22) என்ற மாணவியும் படித்து வருகிறார். இவர் அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். 

இந்த நிலையில் நேற்று காலை, தங்கும் விடுதியில் தன்னுடைய அறையில் கீதா தூக்குப்போட்டு தற்ெகாலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தார்வார் உபநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

வீடியோ கால் செய்து தொல்லை

முன்னதாக, கீதாவின் அறையில் இருந்து ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது. அந்த கடிதத்தில், பயிற்சி மையத்தில் தன்னுடன் படிக்கும் பிரவீன் (24), அடவேயப்பா (22) ஆகிய 2 பேரும் தனது செல்போனுக்கு அடிக்கடி ‘வீடியோ கால்’ செய்து தொந்தரவு செய்து வருகிறார்கள். 

இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிேறன் என்று அதில் கூறியிருந்தார். இதுகுறித்து தார்வார் உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரவீன் மற்றும் அடவேயப்பாவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story