ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது; 660 கிலோ அரிசி -வேன் பறிமுதல்
ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை கைது செய்த போலீசாா் அவாிடம் இருந்து 660 கிலோ அாிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனா்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று காலை ஆப்பக்கூடலில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் ரோட்டில் பெருந்தலையூர் என்ற இடத்தில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது, அந்த வேனில் 660 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வேனை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், பவானி குருப்பநாயக்கன்பாளையம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த அழகரசன் (வயது 30) என்பதும், இவர் பவானி பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை வெளி மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வேனில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அழகரசனை கைது செய்து கோர்ட்டு உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து வேன் மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story