தோட்டத்தில் புகுந்து தென்னைகளை சேதப்படுத்திய யானைகள்
விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் புகுந்து தென்னைகளை யானைகள் சேதப்படுத்தின.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட முதலியார்பட்டி மேட்டு தெருவை சேர்ந்தவர்கள் முத்துக்குட்டி, தங்கவேலு. கோட்டைவிளைப்பட்டியை சேர்ந்தவர் மாரி. இவர்களின் தோட்டங்கள் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள செட்டி பனங்காடு பகுதியில் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு யானைகள் கூட்டமாக புகுந்து, 15-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆம்பூர் வன அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே வன ஊழியர்கள் வந்து தோட்டத்தை பார்வையிட்டு சென்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, யானைகள் அடிக்கடி தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களையும், தென்னை மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. ஆகவே வனத்துறையினர் யானைகள் இங்கு வராத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story