12 மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது


12 மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 12 March 2022 4:58 PM IST (Updated: 12 March 2022 4:58 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயம் அருகே 12 மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த குரும்பட்டி பகுதியில் சாவித்திரி என்பவருடைய நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் (வயது 71) என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

 நிலத்தில் நெற்பயிர் வளர்த்துள்ளது. இவர் நெற்பயிரை சேதம் செய்வதாக கூறி மயில்களுக்கு விஷம் வைத்ததில் 12 மயில்கள் பலியாகின. 

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் வனத்துறையினர் விரைந்து வந்து சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் ஆலங்காயம் வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன.

 இதுகுறித்து வனத்துறையினர் எளிய வழக்குகள் மற்றும் அபராதத்துடன் முடிப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகி விட்டது.

 தேசிய பறவையான மயில்களை கொல்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story