முதல்- அமைச்சருக்கு ஒன்றியக்குழு கூட்டத்தில் பாராட்டு
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்த முதல்- அமைச்சருக்கு நீடாமங்கலம் ஒன்றியக்குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நீடாமங்கலம்;
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்த முதல்- அமைச்சருக்கு நீடாமங்கலம் ஒன்றியக்குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், ஒன்றிய துணை தலைவர் ஞானசேகரன், ஆதி.ஜனகர் (அ.தி.மு.க.), பாரதிமோகன் (கம்யூனிஸ்டு), ராஜா (அ.ம.மு.க.) மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பாராட்டு
கூட்டத்தின் போது உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு மருத்துவ கல்வி பயில சென்ற தமிழக மாணவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, மேலும் மீட்பு குழுவில் நியமிக்கப்பட்ட 3 எம்.பி.க்கள் மற்றும் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. ஆகியோருக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழக மாணவர்கள், இளைஞர்களை உற்சாகப்படுத்தவும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி தகுதி படுத்தும் அற்புத திட்டமான நான் முதல்வன் திட்டத்தை ஏற்படுத்திய தமிழகமுதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது,
நீடாமங்கலம் போலீஸ் நிலையம் மற்றும் இன்ஸ்பெக்டர் அலுவலகம் கட்ட 10 ஆயிரம் சதுர அடி இடம் வழங்குவது, சார் பதிவாளர் அலுவலகம் கட்ட 5ஆயிரம் சதுர அடி இடம் வழங்குவது மற்றும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்துக்கும் இடம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story