ஊட்டி நகராட்சியில் வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை


ஊட்டி நகராட்சியில் வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை
x

ஊட்டி நகராட்சியில் வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை என்று ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊட்டி

ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:- 

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், வடிகால் கட்டணம், ஆக்கிரமிப்பு கட்டணம், கடை வாடகை கட்டணம், குத்தகை இனங்கள், தொழில் வரி உரிமம் போன்றவற்றுக்கு வரி செலுத்தாமல் உள்ளவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் நகராட்சி அலுவலகம் மற்றும் மார்க்கெட்டில் வரி வசூல் மையத்தில் உரிய தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

 தவறும் பட்சத்தில் குடிநீர், வடிகால் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களில் கடைகளுக்கு நிலுவை தொகை போக மீதமுள்ள தொகையை செலுத்தாத உரிமைதாரர்கள் உடனடியாக நிலுவைத் தொகை செலுத்த வேண்டும். தவறினால் நகராட்சி மூலம் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும்.

 நகராட்சியில் பலர் கடை வாடகை, சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிம கட்டணம் போன்றவற்றை உரிய காலத்தில் செலுத்தாததால், நகராட்சி ஊழியர்களது ஊதியம், வாகன எரிபொருள் செலவினம், மின்கட்டணம், பிற நிர்வாகச் செலவுகளை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, அனைத்து வரிதாரர்களும் நிலுவை மற்றும் நடப்பு வரி தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story