அனகாபுத்தூரில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் சாவு


அனகாபுத்தூரில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 12 March 2022 6:57 PM IST (Updated: 12 March 2022 6:57 PM IST)
t-max-icont-min-icon

அனகாபுத்தூரில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாம்பரம்,  

சென்னையை அடுத்த அனகாபுத்தூர் குருசாமி நகரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர், பம்மல் பகுதியில் தேங்காய் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் வித்யா(வயது 23). பி.காம்., பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டின் முதல் தளத்தில் உள்ள பால்கனியில் நின்றிருந்த வித்யா, நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இதில் தலையில் படுகாயம் அடைந்த வித்யா, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இதுபற்றி சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story