ஊரக சுய வேலைவாய்ப்பு மையத்தில் ஆண்டுதோறும் 750 பேருக்கு பயிற்சி


ஊரக சுய வேலைவாய்ப்பு மையத்தில் ஆண்டுதோறும் 750 பேருக்கு பயிற்சி
x
தினத்தந்தி 13 March 2022 12:15 AM IST (Updated: 12 March 2022 7:36 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஊரக சுய வேலைவாய்ப்பு மையத்தில் 750 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக இயக்குனர் நடராஜன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம்:-

நாகை மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஊரக சுய வேலைவாய்ப்பு மையத்தில் 750 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக இயக்குனர் நடராஜன் தெரிவித்தார்.

கறவைமாடு வளர்ப்பு

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் துளசியாபுரம் ஊராட்சியில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் கறவைமாடு வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் நடராஜன் தலைமை தாங்கினார்.மகளிர் திட்ட உதவி அலுவலர் பாலன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார்.
 இதில் கறவை மாட்டை எந்தவித காலநிலை சூழலிலும், ஆரோக்கியமாக வளர்த்தல், மண்புழு உரம் தயாரித்தல் ஆகியவற்றுக்கான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. 

சைக்கிள் ஊர்வலம்

தொடர்ந்து ஊட்டச்சத்து குறைப்பாடு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.  நிகழ்ச்சியில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் நடராஜன் பேசும் போது கூறியதாவது:-
கிராமப்புற பெண்கள் முன்னேற்றம் பெற அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி நாகை மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் தையல், அழகு நிலையம், செல்போன் சர்வீஸ் உள்ளிட்ட 25 வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனை கிராம பகுதியிலுள்ள பெண்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

750 பேருக்கு பயிற்சி

நாகை மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்பு மையத்தில் ஆண்டுதோறும் 750 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அது மட்டும் இன்றி வேலை கிடைப்பதற்கும், சுய தொழில் தொடங்குவதற்கும் உள்ள வழிமுறைகளைகளும், ஆலோசனைகளும் பயிற்சி மையத்தில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதில் துளசியாபுரம் ஊராட்சியை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story