திருமண ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு


திருமண ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 March 2022 7:46 PM IST (Updated: 12 March 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

திருமண ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்செந்தூர்:
தட்டார்மடம் வாழத்தூரை சேர்ந்தவர் சண்முகநாதன் மகன் பட்டுராஜ். இவரும், உறவினர் பெண் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பட்டுராஜ் தனது பெற்றோரிடம் திருமணத்துக்கு சம்மதம் கேட்பதற்காக அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்துள்ளார். 
அப்போது மூத்த மகன் திருமணம் முடிந்த பிறகு உங்களுடைய திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என பட்டுராஜின் பெற்றோர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. 
இதையடுத்து பட்டுராஜ் திருமண ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதற்கிடையே பட்டுராஜின் அண்ணன் திருமணம் கடந்த மாதம் நடந்துள்ளது. இதனை அறிந்த அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பட்டுராஜை வலியுறுத்தியுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள பட்டுராஜ் மறுத்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் திசையன்விளை போலீசில் புகார் அளித்துள்ளார். அப்போது நடந்த விசாரணையில், திருமணம் செய்து கொள்வதாக பட்டுராஜ் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. 
அதேபோல்   கடந்த மாதம் 27-ந் தேதி திருமணம் செய்வதாக கூறி அந்த பெண்ணை பட்டுராஜ் வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது பட்டுராஜூம், அவருடைய தந்தை சண்முகநாதனும் சேர்ந்து அந்த பெண்ணை அவமரியாதை செய்து துன்புறுத்தியதாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மனோகரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story