கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்
கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலத் என்னும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சார்பு நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன், குற்றவியல் நீதிபதிகள் எஸ்.சுப்பிரமணியன், பாரதிதாசன், பர்வத ராஜ் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் வக்கீல்கள் சந்திரசேகர், மோகன்தாஸ், சிவகுமார், சோலையப்பன், விஜயகுமார், பொன்னுச்சாமி, சுந்தரபாண்டி, வட்ட சட்டப்பணிக்குழு உதவியாளர்கள் ஜோன்ஸ் இமானுவேல், மரிக் கொழுந்து மற்றும் வங்கி, இன்சூரன்ஸ் மேலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நேற்று ஒரே நாளில் விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி வராக்கடன், குற்றவியல் நீதிமன்ற வழக்குகள் என 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.1 கோடியே 9 லட்சம் தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story