சத்துணவு ஓய்வூதியர்கள் சங்க மாநாடு
கயத்தாறில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநாடு நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் 3-வது மாநில மாநாடு ராமலட்சுமி தலைமையில் நடைபெற்றது. முருகன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் செல்லத்துரை தொடக்க உரையாற்றினார். கயத்தாறு வட்டார செயலாளர் தங்கவேல் அறிக்கை வாசித்தார். சங்கத்தின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை ரீட்டா பேசினார். தொடர்ந்து கோவில்பட்டி வட்டாரம் சார்பில் இன்னாசிமுத்து வாழ்த்தி பேசினார். மாவட்ட தலைவர் கோதண்டராமன், துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில துணைத்தலைவர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் நிறைவுரை ஆற்றினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழக அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலதாமதம் இல்லாமல் அவர்களது ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story