நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 76 வாகனங்கள் பறிமுதல்-வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை


நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 76 வாகனங்கள் பறிமுதல்-வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 March 2022 7:55 PM IST (Updated: 12 March 2022 7:55 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 76 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

நாமக்கல்:
வாகன சோதனை
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் வட்டார போக்குவரத்து துறையினர் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில் நாமக்கல் வடக்கு, தெற்கு மற்றும் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் இந்த அலுவலகங்களின் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் 3,691 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
அதில் 841 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. ரூ.8 லட்சத்து 68 ஆயிரம் வரியாக வசூல் செய்யப்பட்டது. மேலும் 495 வாகனங்களுக்கு ரூ.26 லட்சத்து 76 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
76 வாகனங்கள் பறிமுதல்
இந்த சோதனையின் போது தகுதிச்சான்று புதுப்பிக்காதது, அனுமதி சீட்டு இல்லாமல், வரி செலுத்தாமல் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 76 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story