மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை தொடங்குகிறது
நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை தொடங்குகிறது.
நாகப்பட்டினம்:-
நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை தொடங்குகிறது.
இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ மதிப்பீட்டு முகாம்
நாகை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 6 ஒன்றியங்களில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 25-ந்தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்களான 3 சக்கர வாகனம், சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடைபயிற்சி வண்டி, கல்வி உதவித்தொகை மற்றும் இலவச அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
முகாம் நடைபெறும் இடங்களின் விவரம் வருமாறு:-
பாப்பாகோவில் அரசு பள்ளி
நாளை நாகை பாப்பாகோவில் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 16-ந் தேதி கீழ்வேளூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 18-ந் தேதி திருமருகல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 21-ந் தேதி திருப்பூண்டி வடக்கு கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 23-ந் தேதி தலைஞாயிறு வையாபுரியார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
25-ந் தேதி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் நடக்கிறது. 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள், மாற்றுத்திறன் அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் பெற பிறப்பு சான்றிதழ் நகல்-1, ஆதார் அட்டை நகல்-1, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, வருமானச்சான்று நகல்-1, குடும்ப அட்டை நகல்-1, தேசிய அடையாள அட்டை நகல்-1 ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story