காளிகாம்பாள் கோவிலில் நடிகை நயன்தாரா
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரம்பூர்,
சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று மேயராக பிரியா ராஜன் பதவி ஏற்றுக்கொண்டதற்காக மானவ் மித்ரா சேவா சமிதி அமைப்பு சார்பில் சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன், நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நயன்தாரா வந்த தகவல் அறிந்ததும் அங்கு ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அபிஷேகம் முடிந்ததும் சாமி கும்பிட்டுவிட்டு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சென்று விட்டனர். முன்னதாக அங்கிருந்த பொதுமக்கள், நடிகை நயன்தாராவுடன் ‘செல்பி’ எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story