குடோனில் பதுக்கி வைத்த 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


குடோனில் பதுக்கி வைத்த 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 12 March 2022 8:47 PM IST (Updated: 12 March 2022 8:47 PM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கி வைத்த 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே எடப்பாளையம் அலமாதி பகுதியில் மர்ம நபர்கள் சிலர் குடோனில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசார் அலமாதி பகுதியில் உள்ள குடோனில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அங்கு அந்த குடோனில் 8 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக 3 மினி லாரியும், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றினர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அந்த குடோனில் இருந்து தப்பி ஓடிய நபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story