மேல்மலையனூர் அருகே கோட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது

மேல்மலையனூர் அருகே கோட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 12 March 2022 9:46 PM IST (Updated: 12 March 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே கோட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது

மேல்மலையனூர்

மேல்மலையனூர் அருகே பெருவளூர் கிராமத்தில் பழமைவாய்ந்த கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  5-ம் நாளான நேற்று முன்தினம் இரவு நாக வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. முன்னதாக சிவபெருமானுக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

Next Story