சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 12 March 2022 9:50 PM IST (Updated: 12 March 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவெண்ணெய்நல்லூர்,


உளுந்தூர்பேட்டை அடுத்த திருவெண்ணெய்நல்லூர் தாலுகா சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, 9-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ்(23) என்ற தொழிலாளிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது விக்னேஷ், அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கைது

பின்னர் அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி விக்னேசிடம் வற்புறுத்தி கேட்டுள்ளார். ஆனால் அவரோ திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விக்‌னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story