ஊரக வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
ஊரக வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
விழுப்புரம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் டேவிட்குணசீலன் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பிரசார செயலாளர் அப்துல்லா வரவேற்றார். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில முன்னாள் துணை பொதுச்செயலாளர் அருணகிரி, தமிழ்நாடு சாலை பணியாளர் சங்க பிரசார செயலாளர் குமரவேல், மாநில கவுரவ தலைவர் ஜெயச்சந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், தலைமை நிலைய செயலாளர் பாலாஜி, மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார், செல்லப்பாண்டி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கூட்டத்தில் மாநில அளவில் ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய திட்டங்களை அமல்படுத்துவதில் கால அவகாசங்கள் வழங்க வேண்டும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story