பள்ளி மாணவி பலாத்காரம் எலக்ட்ரீசியன் கைது


பள்ளி மாணவி பலாத்காரம் எலக்ட்ரீசியன் கைது
x
தினத்தந்தி 12 March 2022 10:44 PM IST (Updated: 12 March 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவி பலாத்காரம் எலக்ட்ரீசியன் கைது


விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 23). எலக்ட்ரீசியனான இவர் அந்த பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அம்மாணவி தற்போது 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இதையறிந்ததும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story