கெலமங்கலம் அருகே நாகமுனீஸ்வர கோவில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


கெலமங்கலம் அருகே நாகமுனீஸ்வர கோவில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 12 March 2022 10:49 PM IST (Updated: 12 March 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் அருகே நாகமுனீஸ்வர கோவில் தேரோட்டம் நடந்தது. இதை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ஜக்கேரி ஊராட்சியில் உள்ள ஒன்னகுறிக்கி கிராமத்தில் நாக முனீஸ்வர கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், ஹோமங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story