கிருஷ்ணகிரியில் டைல்ஸ் கடையில் திருட முயன்ற 2 பேர் கைது
கிருஷ்ணகிரியில் டைல்ஸ் கடையில் திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி காந்தி ரோட்டை சேர்ந்தவர் பாலாஜி (வயது 40). இவர் அவதானப்பட்டியில் டைல்ஸ் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு 2 பேர் டைல்ஸ் கடைக்கு வந்து ஷட்டரை திறந்து உள்ளே இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள டைல்ஸ் கற்களை திருடி கொண்டு வெளியே வந்தனர்.
இதை அருகில் இருந்தவர்கள் கவனித்து 2 பேரையும் பிடித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கோணிகொட்டாய் உமாசங்கர் (28), வேட்டியம்பட்டி சிவக்குமார் (24) என தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story