பாலக்கோடு அருகே பிறந்த 15 நாளில் பெண் குழந்தை சாவு


பாலக்கோடு அருகே பிறந்த 15 நாளில் பெண் குழந்தை சாவு
x
தினத்தந்தி 12 March 2022 10:51 PM IST (Updated: 12 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே பிறந்த 15 நாளில் பெண் குழந்தை இறந்தது.

பாலக்கோடு:
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன ஆனந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சுமித்ரா. இவர் பிரசவத்திற்காக பாலக்கோடு அருகே தண்டுகாரணஅள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு நேற்று மதியம் பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது குழந்தை திடீரென இறந்தது. இது குறித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் குழந்தை சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story