திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,461 வழக்குகளுக்கு தீர்வு


திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,461 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 12 March 2022 10:51 PM IST (Updated: 12 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,461 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,461 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

 மக்கள் நீதிமன்றம்

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்டத்தில் உள்ள தலைமை மற்றும் கிளை நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 

திருவண்ணாமலை தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திருமகள் தலைமை தாங்கி விளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். இதில் பார் அசோசியேசன் தலைவர் மற்றும் துணைத்தலைவர், மூத்த வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

 2,461 வழக்குகளுக்கு தீர்வு

மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கியில் விவசாய கடன் மற்றும் கல்விக்கடன் பெற்ற வாராக் கடன் வழக்குகள் போன்ற 5,875 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன.

இதில் 2,461 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக ரூ.9 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 439 வழங்கப்பட்டது.

Next Story