படவேடு, கடம்பையில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்
படவேடு, கடம்பையில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது.
ஆரணி
படவேடு, கடம்பையில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது.
படவேடு
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேட்டில் வீரகோவில் வளாகத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் தாசில்தார் சண்முகம் தலைமையில் நடந்தது.
சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் உதயகுமார் வரவேற்றார்.
முகாமில் பட்டா மாறுதல் சம்பந்தமாக மற்றும் குடும்ப அட்டை கோரி மொத்தம் 106 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அதில் 12 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு உரியவரிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மண்டல துணைத் தாசில்தார் சிவலிங்கம், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் படவேடு கிராம நிர்வாக அலுவலர் சம்பத் நன்றி கூறினார்.
கடம்பை
சோமாசிபாடி வருவாய் உள்வட்டம் கடம்பை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிக்கான சிறப்பு பட்டா மாறுதல் முகாம் கடம்பை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடந்தது.
கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சக்கரை தலைமை தாங்கினார். மண்டல துணைத் தாசில்தார் கவுரி, சோமாசிபாடி வருவாய் ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடம்பை கிராம நிர்வாக அலுவலர் என்.சரவணன் வரவேற்றார்.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், பெயர் திருத்தம் என மொத்தம் 32 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 13 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து முகாமிலேயே ்சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம் பயனாளிகளுக்கு அதற்கான ஆணையை வழங்கினார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர் முத்துவடிவு, ஊராட்சி மன்ற தலைவர்கள் கடம்பை மாரிமுத்து, வேடநத்தம் குப்புசாமி, அட்மா ஆலோசனைக் குழு தலைவர் சோமாசிபாடி சிவக்குமார், வட்ட துணை ஆய்வாளர் சாகுல்அமீது, வட்ட சார் ஆய்வாளர் முனியன், கிராம உதவியாளர் தங்கவேலு மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story