மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
தேசூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே உள்ள திருமால்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரின் மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அதை, யாரோ திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அவர் தேசூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிைள திருடியவரை தேடி வந்தனர்.
போலீசார் குண்ணகம்பூண்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும், தப்பிச்செல்ல முயன்றார்.
அவரை பிடித்து விசாரித்த போது, அவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பென்னகர்நகர் கிராமம் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த கோட்டைபூண்டியான் மகன் ஹரி (வயது 24) எனத் தெரிய வந்தது.
அவரிடம் மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை கேட்டபோது, அவர் ஓட்டி வந்தது காணாமல் போன திருமால்பாடி கிராமத்தை சேர்ந்த குமாரின் மோட்டார் சைக்கிள் எனத் தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் வடவணக்கம்பாடி, மகமாய்திருமணி ஆகிய ஊர்களில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடியதாக கூறினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story