மோட்டார் சைக்கிளில் யானை தந்தம் கடத்தல்; 5 பேர் கைது
பழனி அருகே மோட்டார் சைக்கிளில் யானை தந்தத்தை கடத்தி விற்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி:

யானை தந்தம் கடத்தல்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சவரிக்காடு மலைக்கிராமத்துக்கு, மோட்டார் சைக்கிளில் யானை தந்தம் கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில், தேக்கந்தோட்டம் என்னுமிடத்தில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் வனச்சரகர் பழனிக்குமார் தலைமையில் வனத்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பழனியில் இருந்து சவரிக்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை வழிமறித்து வனத்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சவரிக்காட்டை சேர்ந்த முத்துக்குமார் (வயது 27), பாச்சலூர் கடைசிக்காடு பகுதியை சேர்ந்த ராஜ் (37) என்று தெரியவந்தது.
விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த 2 பேர் மீதும் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வனத்துறையினர் சோதனை செய்தனர்.
8 ஆண்டுகளுக்கு முன்பு...
அப்போது மோட்டார் சைக்கிளின் முன்பகுதி சீட் கவரில், துணிப்பை ஒன்று இருந்தது. அந்த பையை எடுத்து வனத்துறையினர் சோதனை செய்தனர். அதற்குள் 1 அடி நீளம் கொண்ட யானை தந்தம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
இதில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சவரிக்காடு வனப்பகுதிக்கு சென்றபோது முத்துக்குமார் தந்தத்தை கண்டெடுத்ததாகவும், அதனை பழனியில் உள்ள கும்பலுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் யானை தந்தம் பழமையாக இருப்பதாக கூறி அதனை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வாங்க மறுத்ததால், மீண்டும் சவரிக்காட்டுக்கு கொண்டு செல்வதாகவும் வனத்துறையினரிடம் முத்துக்குமார் கூறினார்.
கூண்டோடு பிடிக்க திட்டம்
இதற்கிடையே யானை தந்தம் வாங்க வந்த கும்பலையும் வனத்துறையினர் கூண்டோடு பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக, முத்துக்குமாரை துருப்புச்சீட்டாக வனத்துறையினர் பயன்படுத்தினர். அதாவது முத்துக்குமாரின் செல்போனில் இருந்து, அந்த கும்பலை சேர்ந்த ஒருவரிடம் தொடர்பு கொள்ள செய்தனர்.
அதில் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது என்றும், எனவே பெட்ரோல் வாங்க பணம் தேவைப்படுவதாகவும் முத்துக்குமார் தெரிவித்தார். மேலும் பழனி பஸ்நிலையத்துக்கு வந்து பணத்தை வாங்கி கொள்வதாகவும் முத்துக்குமார் கூறினார்.
சாதாரண உடையில் கண்காணிப்பு
இதனை நம்பிய அந்த கும்பல், பழனி பஸ் நிலையத்தில் முத்துக்குமாரின் வருகைக்காக காத்திருந்தனர். இதனையடுத்து முத்துக்குமார், ராஜ் ஆகியோரை வனத்துறையினர் பழனி பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். வனத்துறையினர், அந்த பகுதியில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர்.
முத்துக்குமாரை கண்டதும், 3 பேர் அவரிடம் பணம் கொடுக்க வந்தனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த வனத்துறையினர் 3 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பாச்சலூரை சேர்ந்த முத்துவேல் (42), சிவலிங்கம் (46), ஆயக்குடி அருகே உள்ள அமரபூண்டியை சேர்ந்த ராஜேஷ்பிரபு (36) என்பது தெரியவந்தது.
5 பேர் கைது
இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 5 பேரும், பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேடசந்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். யானை தந்தத்தை கடத்தி விற்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story