ஆழித்தேரோட்டத்தையொட்டி பந்தல் அமைக்கும் பணி தீவிரம்


ஆழித்தேரோட்டத்தையொட்டி பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 March 2022 11:33 PM IST (Updated: 12 March 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தையொட்டி பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூர்;
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தையொட்டி பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவில் வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்ட விழா 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதைெயாட்டி ஆழித்தேருடன் வலம் வரும் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களும் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பந்தல் அமைக்கும் பணி
ஆழித்தேரோட்டத்துக்கு முதல் நாள் இரவு தியாகராஜர் கோவிலில் இருந்து அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருளுவது வழக்கம். இதன்படி நாளை(திங்கட்கிழமை) இரவு தியாகராஜர் தேரில் எழுந்தருளுகிறார். இதற்காக தியாகராஜர் சாமி செல்லும் வழியான கோவில் விட்டவிசால், சன்னதி தெரு வழியாக ஆழித்தேர் மண்டபம் வரை பந்தல் அமைக்கப்பட்டு துணி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. 
மேலும் ஆழித்தேரில் அலங்கார துணிகள் கட்டும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story