ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் விஷம் குடித்த சிறுமி
கட்டாய தாலிகட்டி பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அடித்து உதைத்ததால் மனவருத்தம் அடைந்த சிறுமி, ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் விஷம் குடித்தார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்,
கட்டாய தாலிகட்டி பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அடித்து உதைத்ததால் மனவருத்தம் அடைந்த சிறுமி, ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் விஷம் குடித்தார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் ராஜா (வயது 21). இவர் திருப்பூரில் கேட்டரிங் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு உடன் வேலைக்கு வந்து சென்ற திருப்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் ஆசை வார்த்தை கூறி ராமநாதபுரம் அழைத்து வந்த ராஜா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வலுக்கட்டாயமாக கோவிலில் திருமணம் செய்துகொண்டாராம். இதன்பின்னர் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
விஷம் குடித்தார்
இந்தநிலையில் சிறுமியின் நிலை அறிந்து அவரது பெற்றோர் திருப்பூருக்கு வந்துவிடுமாறு கூறியுள்ளனர். இதனால் அவரை ராமநாதபுரத்தில் வைத்து பஸ் ஏற்றிவிட அழைத்து வந்தபோது ராஜா கடுமையாக சண்டை போட்டாராம். இதனால் மனவருத்தம் அடைந்த சிறுமி, பஸ் நிலையத்தில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்ததாக கூறப்படுகிறது.. இதையடுத்து ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அங்கும் சிறுமியை , ராஜா அடித்து, உதைத்ததாகவும் தெரியவருகிறது.
கைது
இதுபற்றி அறிந்த ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அமுதா, வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story