திடீரென வைக்கப்பட்ட அரபு மொழியிலான கண்ணாடி பேழை


திடீரென வைக்கப்பட்ட அரபு மொழியிலான கண்ணாடி பேழை
x
தினத்தந்தி 12 March 2022 11:43 PM IST (Updated: 12 March 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு நகராட்சியில் திடீரென வைக்கப்பட்ட அரபு மொழியிலான கண்ணாடி பேழை ஊழியர்கள் அகற்றினர்

பேரணாம்பட்டு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சியில் நேற்று இரவு ஆணையாளர் செய்யதுஉசேன் தன் இருக்கைக்கு பின்புறம் கண்ணாடிப் பேழையில் அரபு மொழியிலான எழுத்துகளை தமிழக அரசு சின்னம் பதித்து வைத்ததாக கூறப்படுகிறது. 

இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இது குறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் வேலூர் மாவட்ட கலெக்டர், நகராட்சிகள் மண்டல இயக்குனர் ஆகியோருக்கு புகார்கள் தெரிவித்தனர். 

இந்த நிலையில், திடீரென இரவோடு இரவாக நகராட்சி ஊழியர்களால் அந்த கண்ணாடி பேழை அகற்றப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
=========

Next Story