இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர ரோந்து
தேவிபட்டினம் கடற்கரையில் இலங்கை படகு சிக்கியதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பனைக்குளம்.
தேவிபட்டினம் கடற்கரையில் இலங்கை படகு சிக்கியதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இலங்கை படகு சிக்கியது
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள ஜமீன்தார் வலசை கடற்கரையில் நேற்று முன்தினம் இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று நிறுத்தப்பட்டு அந்த படகில் வந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
விசாரணையில் கடற்கரையில் நிறுத்தப்பட்டது இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த பிளாஸ்டிக் படகு என்பது தெரிய வந்தது. ஆனால் அந்த படகில் வந்த நபர்கள் கடத்தல்காரர்களா அல்லது வேறு ஏதேனும் சதிச் செயல்களில் ஈடுபடக் கூடியவர்களா? என தெரியவில்லை. இதனால் கியூ பிரிவு மற்றும் கடலோர போலீசார் படகில் வந்தவர்கள் பற்றிய விவரம் தெரியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஹெலிகாப்டர் மூலம் ரோந்து
இந்த நிலையில் உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி கடல் பகுதியான தொண்டி முதல் உப்பூர், தேவிபட்டினம், சித்தார்கோட்டை, மண்டபம், ராமேசுவரம் வரையிலான கடல் பகுதியில் நேற்று தாழ்வாக பறந்தபடி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. இலங்கையிலிருந்து படகில் வந்த நபர் தங்க கட்டிகளை கடத்தி கொண்டு வந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story