ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்
ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
காரைக்குடி,
காரைக்குடி ஸ்ரீராம்நகரில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையமான திருவள்ளுவர் கல்வி மற்றும் கிராம மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பாக தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கவுஷல் யோஜனா திட்டத்தில் பயிற்சிபெறும் மாணவ-மாணவிகளை கொண்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
இதில் காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம், அரசு மருத்துவர் அருள்தாஸ், அறக்கட்டளையின் இயக்குனர் ஆதீனம் மற்றும் நிர்வாக மேலாளர் செந்தமிழ் செல்வன் ஆகியோர் கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலம் பயிற்சி மையத்தில் தொடங்கி பைபாஸ் வழியாக வள்ளல் அழகப்பர் சிலை வந்தடைந்தது, நகரின் முக்கிய வழியாக மீண்டும் பயிற்சி மையம் சென்றடைந்தது.
Related Tags :
Next Story