வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 13 March 2022 12:03 AM IST (Updated: 13 March 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரத்சந்தர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவி ஜெயசுதா ராபர்ட் வரவேற்று பேசினார். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் இருதய நோய், எலும்பு, காசநோய் உள்ளிட்ட அனைத்து வகை நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நோய் கண்டறியும் எந்திரங்கள் மூலம் நோயாளிகளுக்கு நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமில் அனைத்து மருத்துவ நிபுணர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Next Story