குமரியில் 10 இடங்களில் 28-ந் தேதி சாலை மறியல் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
குமரியில் 10 இடங்களில் 28-ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகர்கோவில்,:
குமரியில் 10 இடங்களில் 28-ந் தேதி சாலை மறியல்
போராட்டம் நடத்துவது என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குமரி மாவட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ஞானதாஸ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகன், ஐ.என்.டி.யு.சி. மாநகர தலைவர் மகாலிங்கம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தொழிற்சங்க சட்டங்களை மாற்றக் கூடாது, பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவதை கண்டிப்பது, 100 நாள் வேலை திட்டத்தை கூடுதல் நாட்களாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி 10 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது மற்றும் 29-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story