‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 13 March 2022 12:20 AM IST (Updated: 13 March 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதிய சாைல வேண்டும்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு உட்பட்ட அயன்ரெட்டியாபட்டி கிராமத்தில் பல வருடங்களுக்கு முன் போடப்பட்ட தாா்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. மழை காலங்களில் சாலைகளில் நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 வித்யாசாகர், மல்லாங்கிணறு. 

தேங்கி நிற்கும் கழிவுநீர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 31-வது வார்டு பகுதியில் நகரின் கழிவுநீர் கால்வாய் ரெயில்வே பாலம் வழியாக செல்கிறது. கால்வாய் முறையாக சீரமைக்கப்படாததால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும்  துர்நாற்றம் வீசுவதோடு கழிவுநீர் அளவு அதிகரித்து வீடுகளுக்கு புகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாயினை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? 
அபினேஷ், காரைக்குடி. 
சேதமடைந்த மின்கம்பம்
விருதுநகா் தர்காஸ் தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதியில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். 
ஜாகீர், விருதுநகர். 

கூடுதல் பஸ்கள் வேண்டும்

மதுரை மாவட்டம் பேரையூர் எழுமலை வழித்தடத்தில் அத்திபட்டி வழியாக மிக குறைந்த அளவு பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் கூட்டநெரிசல் காரணமாக மாணவர்கள் படிகட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் ெசய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க  வேண்டும். 
முருகேசன்,பேரையூர்.

ேநாய் பரவும் அபாயம்

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சக்கர குளம் பகுதியில் மழைக்காலத்தில் கழிவுநீருடன் மழைநீரும் ேசர்ந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு ெகாசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மக்களின் நலன் கருதி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா? 
அாீஸ், ஸ்ரீவில்லிப்புத்தூர். 

வீணாகும் தண்ணீர் 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் தேவர் சிலை அருகே காவிரி குடிநீர் குழாய் உள்ளது. தற்போது இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் சாலையில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராஜன், பரமக்குடி.

Next Story