சைக்கிளில் சென்ற தொழிலாளி கீழே விழுந்து சாவு
சைக்கிளில் சென்ற தொழிலாளி நிலைதடுமாறி கீழே விழுந்ததில், இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் உடைந்து குத்தி உயிரிழந்தார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் சான்றோர் பாளையத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் வெங்கடேசன் (வயது 28). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று சான்றோர் பாளையத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென நிலைதடுமாறி சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்தார். அப்போது அவரது இடுப்பில் மதுபாட்டில் ஒன்றை வைத்திருந்தார். அவர் கீழே விழுந்த போது போது அந்த பாட்டில் உடைந்து தொடை பகுதியல் குத்தியது. இதனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story